சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

23 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட உதகை மலை ரயில்!

மீண்டும் தொடங்கிய மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில்.

Hill Train

உதகை மலை ரயில் - DIN

Updated On :

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை 23 நாள்களுக்கு பிறகு இன்று தொடங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து, மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் பாறாங்கற்கள், மண் சரிந்து ரயில் பாதையை மூடியது.

மரங்கள் சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே விழுந்தன. ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் மலைரெயில் பாதையில் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 9ம் தேதி முதல் நேற்று 31ஆம் தேதி வரை உதகை மலை ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததாலும், ரயில் பாதையை பராமரிக்கும் பணி முடிவடைந்ததாலும் 23 நாள்களுக்கு பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரெயில் இன்று முதல் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மலை ரயில் வழக்கம்போல் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.