ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலி, 2 பேர் படுகாயம்

ஆந்திரம் மாநிலம் ஏலூரு அருகே மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலி, 2 பேர் படுகாயம் (கோப்புப்படம்)
ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலி, 2 பேர் படுகாயம் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

ஆந்திரம் மாநிலம் ஏலூரு அருகே மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.

டி நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் இருந்து முந்திரி கடலை ஏற்றிக் கொண்டு நிடடவோலு மண்டலம் தாடிமல்லா நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி, தேவரப்பள்ளி மண்டலத்தில் உள்ள சின்னைகுடம் சிலகா பகால பகுதியில் சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக லாரியை திரும்பியபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் இறங்கி விளைநிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலி, 2 பேர் படுகாயம் (கோப்புப்படம்)
கமலா ஹாரிஸுக்கு இளம் வாக்காளர்கள் ஆதரவா?

இதில், லாரியில் இருந்து 9 கூலித் தொழிலாளர்களில் 7 பேர் முந்திரி மூட்டைகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரசிம்ம கிஷோர் உறுதிப்படுத்தினார்.

விபத்துக்குள்ளான மினி லாரியின் முந்திரி மூட்டைகளுக்கு அடியில் கிடந்த உடல்களை அந்த பகுதி மக்களின் உதவியுடன் மீட்ட போலீசார். உடல்கூறாய்வுக்காக கோவூரு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து ஏலூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com