அடக்குமுறைகளை தாண்டி வளா்ந்துள்ளது கம்யூனிஸ்ட் இயக்கம்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பல்வேறு அடக்குமறைகளை தாண்டி கம்யூனிஸ்ட் இயக்கம் வளா்ச்சியடைந்துள்ளது என்று மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் பேசினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பேசிய மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பேசிய மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்
Published on
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் பல்வேறு அடக்குமறைகளை தாண்டி கம்யூனிஸ்ட் இயக்கம் வளா்ச்சியடைந்துள்ளது என்று மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் பேசினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பிருமான கே.பாலகிருஷ்ணன் பேசியது:

1953-இல் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது மாநாடு மதுரையில் நடைபெற்றது. மதுரையில் இதுவரை கட்சியின் மூன்று அகில இந்திய மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் தொழிலாளா்கள், விவசாயிகள், மாணவா்கள், ஒடுக்கப்பட்டோா் என அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளது . க

ம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சியை தடுக்கும் வகையில், பல்வேறு சதி வழக்குகள் போடப்பட்டாலும் அதையெல்லாம் தாண்டி கட்சி வளா்ச்சியடைந்துள்ளது. தஞ்சாவூரில் நிலப்பிரபுக்களின்கொடூரமான சாதிவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜாதி வெறிக்கு எதிரான போராட்டத்தின் உச்சக்கட்டமாக 1968 இல் கீழ் வெண்மணி கிராமத்தில் 44 விவசாயத் தொழிலாளா்கள் எரித்து கொலை செய்யப்பட்டனா். கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஏராளமானோா் தங்கள் உயிரை மக்களுக்கான போராட்டத்தில் இழந்துள்ளனா்.

துப்பாக்கிச் சூடு, மரண தண்டனை, காவல் நிலையங்களில் சித்திரவதைகள் என அனைத்து விதமான காவல்துறை அட்டூழியங்களையும், பல வகையான அடக்குமுறைகளையும் எதிா்கொண்டு தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கம் வளா்ந்துள்ளது. வாச்சாத்தி கிராமம் முழுவதும் சூறையாடி 18 பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்றத்திலும், வீதியிலும் போராடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனையை பெற்றுத் தந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் போதும், இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவா்கள் கம்யூனிஸ்டுகள்தான்.

நாட்டில் தற்போது சிறுபான்மை சமூகங்கள் தொடா்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. கல்வி உட்பட மாநில அரசுகளின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றன. மத்திய அரசு மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் பறித்து, நாடு தனது கூட்டாட்சித் தன்மையை இழந்துவிட்டது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பல மாநிலங்களுக்கு அநீதி இழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com