
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கோடெர்மா மாவட்டத்தின் லால்காபானி கிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இன்று (ஏப்.9) மதியம் வகுப்பு நடந்துக்கொண்டிருந்த போது அந்தக் கட்டடத்தின் மீது மின்னல் பாய்ந்ததில் 9 மாணவர்கள் காயமடைந்ததுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி வளாகத்திலிருந்த சில பெற்றோர்கள் கூறுகையில், அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆஸ்பெடாஸ் தகரத்தின் மூலம் கூரை அமைத்ததுடன், மாணவர்கள் அமர்ந்திருக்கும் மேஜைகள் அனைத்தும் இரும்பினால் செய்யப்பட்டிருந்ததாகவும், இதனால் மின்னல் பாய்ந்தபோது வகுப்பறையினுள் மேஜையில் அமர்ந்திருந்த மாணவர்களின் மீது மின்சாரம் பாய்ந்து அவர்கள் காயமடைந்ததாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த மாணவர்கள் அனைவரும் அங்குள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரின் உடல்நிலையும் சீராகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட காரணமாய் இருந்த பள்ளியின் கட்டுமானம் குறித்தும் அங்கு பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.