
கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கு வருகிற மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவமும், வைகையாற்றில் அழகர் எழுந்தருளும் வைபவமும் பிரம்மாண்டமாக நடைபெறும். மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொள்வர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 8 ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், முக்கிய நிகழ்வான கள்ளழகர், வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மே 12 ஆம் தேதியும் (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி அன்றைய நாள் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இந்த நாளுக்கு மாற்றாக வேறு ஒருநாள் வேலை நாளாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.