

தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது கொடிநாள் செய்தியாக தெரிவித்துள்ளாா்.
இது தொடர்பாக, அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,
தாயகம் காக்கத் தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆயுதப்படை கொடிநாளில் நாட்டு மக்களின் சார்பில் எனது வணக்கங்கள்!
மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும் படைவீரர்களின் பணி ஈடு இணையற்றது.
தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை! என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.