
சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப். 7 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 07.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தவெக மாறும்: விஜய்
வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி 25-வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது.
எனவே அனைத்து மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.