மெக்சிகோ: கரீபியன் கடற்பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹோண்டுராஸுக்கு வடக்கே கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொலம்பியா, கேமன் தீவுகள், கோஸ்டாரிகா, ஜமைக்கா, நிகரகுவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 0.3 மீ முதல் 1 மீட்டர் வரை உயரம் கொண்ட அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க: தகர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கோட்டை!
நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தீவுப்பகுதியில் இருந்து நிலப்பகுதிகளுக்கு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இருவர் பலி; 7000 பேர் வெளியேற்றம்!

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



