சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிப். 17-ல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை!

வருகிற பிப். 17 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

News image
கோப்புப்படம்
Updated On :12 பிப்ரவரி 2025, 8:50 am

DIN

வருகிற பிப். 17 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப். 12) உத்தரவிட்டுள்ளது.

அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஓ.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அதிமுக உள்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம், புதிய தலைமை ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க எந்தவித நிபந்தனையும் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தீர்ப்பினை வரவேற்பதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார்.

தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பிப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

"அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை எக்மோர், பாந்தியன் சாலை, அசோகா ஹோட்டலில் உள்ள டாக்டர் கேபிஎம் ஹாலில் 17-02-2025 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.