போக்சோ குற்றங்களுக்கு புதிய வரைவு அறிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

போக்சோ குற்றங்களுக்கு புதிய வரைவு அறிக்கை வெளியிடப்படும் - அன்பில் மகேஸ்.
அமைச்சர் அன்பில் மகேஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ்
Published on
Updated on
1 min read

போக்சோ குற்றங்கள் தொடர்பாக 4 நாள்களில் புதிய வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

தேர்வுகளை எதிர்கொள்ள ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர். போக்சோ தொடர்பாகவும் மாணவர்கள் பிரச்னை குறித்தும் கூட்டத்தில் பேசி உள்ளோம்.

இதையும் படிக்க: அமைச்சர்களின் துறை மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு!

போக்சோ சம்பந்தமாக மாணவர் மனசு பெட்டி 14417 எண் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு யாருக்கும் அச்சம் இல்லாமல் தொடர்ந்து, எங்கெல்லாம் தவறு நடக்கின்றதோ அங்கெல்லாம் புகார்கள் பெறப்படுகிறது.

புகார் வந்தால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், துரிதமாக எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அதன் பின்பு காவல்துறை பக்கம் வழக்கு சென்றுவிடும், அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள், பள்ளிக்கல்வித்துறையில் கால தாமதம் இல்லாமல் எவ்வாறு செய்யலாம் என விரிவாக பேசியுள்ளோம்.

போக்சோ புகார்கள் தொடர்பாக முதலமைச்சர் ஒரு வரைவு அறிக்கை தயாரிக்க சொல்லி இருக்கின்றார். மூன்று-நான்கு நாள்களில் வரைவு வெளியிடப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படும்.

இனி புகார்கள் வராத வண்ணம் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசியுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com