காதலரை அறிமுகப்படுத்திய ஜாக்லின்!

நடிகை ஜாக்லின் காதல் நாளான்று தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
காதலரை அறிமுகப்படுத்திய ஜாக்லின்!
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் பிரபலம் நடிகை ஜாக்லின் காதல் நாளான்று தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியை நடிகர் ரக்‌ஷனுடன் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஜாக்லின். இந்நிகழ்ச்சியில் பிரபலமடைந்ததைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து, ஜாக்லின் பிரதான பாத்திரத்தில் நடித்த தேன்மொழி பி.ஏ. தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்தொடருக்குக் கிடைத்த வெற்றியின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் ஜாக்லின்.

யுவராஜ் செல்வநம்பியுடன் ஜாக்லின்.
யுவராஜ் செல்வநம்பியுடன் ஜாக்லின்.

இதனைத் தொடர்ந்து, இவர் அண்மையில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 100 நாள்களுக்கு மேல் இருந்து, பணப்பெட்டி போட்டியில் பணப்பெட்டியை எடுக்க முயன்று, குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வர முடியாமல்போனதால் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

அவர் வெளியேற்றப்பட்டாலும், ரசிகர்கள் அவரது முயற்சிக்கு வெகுவாக பாராட்டுத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகை ஜாக்லின் காதல் நாளான்று தன்னுடைய காதலரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஜாக்லின் புகைப்படக் கலைஞர் யுவராஜ் செல்வநம்பியை காதலிப்பதாகத் தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது, யுவராஜ் செல்வநம்பியை காதலிப்பதாகக் கூறியிருந்த ஜாக்லிம், குடும்ப உறவினர் வருகையின்போது யுவராஜும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com