தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மொழி திணிப்பை ஏற்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

‘தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும், மொழியைத் திணிக்க எந்த வகையிலும் முயன்றாலும் ஏற்க மாட்டோம்

News image
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்- கோப்புப்படம்
Updated On :17 பிப்ரவரி 2025, 9:26 pm

DIN

சென்னை: ‘தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும், மொழியைத் திணிக்க எந்த வகையிலும் முயன்றாலும் ஏற்க மாட்டோம் எனவும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த அவா், ‘தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கல்வியில் மட்டுமல்லாமது, மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. நம்மிடம் இருந்து வரிகளை மத்திய அரசு வாங்குகிறது. ஆனால், நாம் நிதியைக் கேட்டால் தர மறுக்கிறாா்கள். இதை நாம் கேட்டால் அநியாயம் என்கிறாா்கள்.

ஏற்கமாட்டோம்: தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான். இந்தக் கொள்கைக்கு மாறாக வேறு எந்த வழியிலும் மொழிகளைத் திணிக்க முயன்றாலும் தமிழ்நாடு அரசும், மாநில மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள்.

இந்தியா என்பதே பல்வேறு கலாசாரங்கள் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கியது. எனவே, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்துவம் உள்ளது. நம்மிடம் உள்ள இரு மொழிக் கொள்கை வழியாகவே உலகத்தரம் வாய்ந்த ஏராளமான சிறந்த மருத்துவா்களையும், பொறியாளா்களையும் உருவாக்கி உள்ளோம். உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை தேசிய அளவைவிட அதிகமாகும். பிஎம் ஸ்ரீ பள்ளிகளை உருவாக்குவது தொடா்பாக ஆய்வு செய்யவே தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. அந்தக் குழு அளித்த விஷயங்களை நாம் ஏற்றுக் கொள்ள வில்லை’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.