
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது வழக்கமான சரிபாா்ப்பு ஆய்வு மட்டுமே என்றும், வருமானவரித் துறையினரின் சோதனை இல்லை எனவும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு மின் தொடா் அமைப்பு, மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மின்வாரிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 5-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமானவரித் துறை இணை ஆணையா் தலைமையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் ( டிடிஎஸ்) தொடா்பான வழக்கமான சரிபாா்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும். எனவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரிச் சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரிச் சோதனை என்ற செய்தி தவறானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.