10வது நாள் - 150 அடி ஆழத்தில் குழந்தை! தோண்டப்பட்ட சுரங்கமும் கைக்கூடாத சோகம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 10 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையைப் பற்றி...
10 வது நாளாக தொடரும் மீட்புப் பணி
10 வது நாளாக தொடரும் மீட்புப் பணிDinamani
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க கடந்த 10 நாள்களாக 160 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட சுரங்கம் திசை மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிச.23 அன்று கோட்புட்லி - பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய நிலத்தின் 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள்  சேத்துனா என்ற 3 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்தது.

பின்னர், அங்கு விரைந்த மீட்புப் படையினர் குழந்தையை மீட்க உள்ளூர் முறைகள் பலவற்றை முயற்சி செய்தனர். அவை அனைத்தும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்ததினால் குழந்தை விழுந்த ஆழ்துளைக்கிணற்றுக்கு அருகிலேயே 160 அடி ஆழத்திற்கு குழித்தோண்டினர்.

குழித்தோண்டப்பட்டு அதனுள் பாதுகாப்பான வழியை அமைக்கும் பணி கடந்த டிச.28 அன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குழந்தை இருக்கும் திசைக்கு நேராக 8 அடிக்கு சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடுமையான பாறைகள் சூழ்ந்த பகுதி என்பதால் இடையிடையே இருக்கும் பாறைகளைத் துளைக்கும் பணி 160 அடி ஆழத்தில் மிகுந்த சிரமத்தோடு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதையும் படிக்க: கோயிலில் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

இந்நிலையில், தோண்டப்பட்ட அந்த சுரங்கம் குழந்தை சிக்கியிருக்கும் திசையில் இல்லாமல் வேறு திசையில் சென்றுள்ளதாகவும் அதனால் குழந்தை எங்கு சிக்கியுள்ளது என்பதைக் கணிக்க முடியவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் கல்பனா அகர்வால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தோண்டப்பட்ட அந்த சுரங்கம் தோல்வியில் முடிந்ததினால் மீட்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னதாக, கடந்த டிச. 23 முதல் ஆழ்துளைக் கிணற்றில் உணவுத் தண்ணீர் இன்றி சிக்கியுள்ள குழந்தையின் உடலில்  கடந்த டிச. 24 முதல் எந்தவொரு அசைவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நாள் முதலே மீட்புப் படையினர் சரியான திட்டமில்லாமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்டு வருவதாக குழந்தையின் உறவினர்களும் அந்த கிராமவாசிகளும் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com