
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டதாகவும், நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இரண்டாவது தளத்தில் உள்ள நிர்வாக பிரிவில் புதன்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் திடீரென தீப்பற்றி கரும்புகை சூழ்ந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனால் அந்த தளம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள், காவலர்கள், சமூக ஆர்வலர்கள் அவரச விளக்குகளை பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக அவசர அவசரமாக முதல் தளத்திற்கு மாற்றினர்.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவம் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்து ஏழு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
பின்னர் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அறைகளை பார்வையிட்டு நோயாளிகளின் உடல்நலம் குறித்தும் விபத்து குறித்தும் கேட்டறிந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு என அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.