பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக நிர்வாகி நீக்கம்!

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி சுதாகர், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இபிஎஸ்
இபிஎஸ்
Published on
Updated on
1 min read

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி சுதாகர், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், 14 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற இளைஞர் முன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் என்பவரும், இந்த வழக்கை முதலில் விசாரித்த அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, சுதாகரைக் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

இது குறித்து எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப. சுதாகர், (103 வடக்கு வட்டக் கழகச் செயலாளர்) இன்றுமுதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com