கோவை உடையாம்பாளையம் பகுதியில் சாலையோர பீப் உணவகம் நடத்தி வந்த நபர்களோடு பாஜக உறுப்பினர் வாக்குவாதம் செய்த விவகாரம் குறித்து பேசிய அண்ணாமலை, அந்த காணொளியை தானும் பார்த்ததாகவும், முழு காணொளியை வெளியிடாமல் பீப் குறித்து அவர் பேசிய ஒரு நிமிட விடியோ மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கக் கூறி காவல்துறையினிடனும் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அந்த பகுதியில் கோவிலின் அருகே மாட்டிறைச்சி உட்பட எந்த அசைவ உணவுகளையும் விற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், அதுவே அந்த பாஜக தொண்டரின் நிலைப்பாடாக இருந்ததாகவும் தெரிவித்தார்.