மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மனிதர்களை இழுக்க மூழ்குவதுபோல் நடிக்கும் முதலைகள்? விடியோ வைரல்!

இந்தோனேசியாவில் மனிதர்களை தண்ணீரில் இழுக்க நடிப்பதாகக் கூறப்படும் முதலைகளைப் பற்றி...

News image

வைரலான விடியோவிலிருந்து..

Updated On :12 ஜனவரி 2025, 8:37 am

இந்தோனேசியா நாட்டிலுள்ள ஓர் நதியில் மனிதர்களை கவர்ந்து தண்ணீருக்குள் இழுக்க முதலைகள் மூழ்குவதுபோல் நடிப்பதாக விடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

அந்நாட்டின் பொர்னியோ மாகாணத்திலுள்ள பரிட்டோ நதியில் உப்பு நீர் முதலைகள் தண்ணீருக்குள் தலைகீழாக திரும்பி உதவிக் கேட்பதுபோல் அதன் கால் விரல்களை விரித்தப்படி வெளியே நீட்டுகின்றன.

இது மனிதர்கள் தான் யாரோ மூழ்குகிறார்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவதாகவும், அதை நம்பி தண்ணீரில் இறங்கும் மனிதர்களை கொன்று உண்ண இவ்வாறு செய்வதாகக் கூறி விடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த விடியோ இணையத்தில் சுமார் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், உயிரியல் நிபுணர்கள் முதலைகள் நடிக்கின்றன எனும் கருத்தை முற்றிலுமாக மறுக்கின்றனர்.

அந்த முதலைகள் அந்த செயல்களை வேறு ஏதேனும் இரைகளை பிடிக்க எதர்சையாக செய்திருக்கக் கூடும் எனவும் அவை மனிதர்களை கவர்ந்திழுக்க இவ்வாறு செய்கின்றன என்பது முற்றிலும் தவறான செய்தி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், சர்வதேச அளவில் ஓர் ஆண்டில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் முதலைகளினால் தாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அதில், மிகவும் ஆபத்தான உப்பு நீர் முதலைகளினால்தான் மனிதர்கள் அதிகம் கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.