அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கனா கண்டேனடி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு: வைரல் விடியோ!

கனா கண்டேனடி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட விடியோ வைரல்.

News image

கனா கண்டேனடி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு. - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :17 ஜூன் 2026, 2:49 pm IST

கனா கண்டேனடி தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட விடியோ வைரலாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் பாணியில் கனா கண்டேனடி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. தென்றல் தொடரை தயாரித்த விகடன் நிறுவனமே, இந்தத் தொடரையும் தயாரித்து வருகிறது.

மூன்று தோழிகள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு, எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

கனா கண்டேனடி தொடரில் பிரதான வேடங்களில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனாக ஜாய்சன் நடிக்கிறார்.

கனா கண்டேனடி தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்தத் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தொடர் ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில், கனா கண்டேனடி தொடர் நிறைவடைகிறது. இந்தத் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

A video taken during the final day of shooting for the series Kana Kaanum Kaalangal has gone viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.