ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவு: அமைச்சர், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

மதுரையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image

ஜெயபாய்

Updated On :12 ஜனவரி 2025, 8:28 pm IST

மதுரை: மதுரையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழறிஞா் சாலமன், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் மதுரை அரசகுடி ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவியான ஜெயபாய், ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவுக் காரணமாக ஜெயபாய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இவருக்கு தியாகமூா்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனா்.

இதனிடையே ஜெயபாய் உடலுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அரசியல் பிரமுகா்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா். பாப்பையா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடா்ந்து மதுரை பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஜெயபாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மாலை அவரது இல்லத்தில் இறுதி சடங்கு நடந்தது. பின்னர் தத்தனேரி பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ஜெயபாய் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.