ஜெயிலர் - 2: அறிவிப்பு டீசரின் மேக்கிங் விடியோ!

ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு டீசரின் மேக்கிங் விடியோ.
ஜெயிலர் - 2: அறிவிப்பு டீசரின் மேக்கிங் விடியோ!
Published on
Updated on
1 min read

ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு டீசரின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். ரஜினியின் பிறந்த நாளான்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் திருநாளயொட்டி ஜன. 14 அன்று ’ஜெயிலர்-2’ திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது.

இதையும் படிக்க: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

இந்த நிலையில், ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு டீசரின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்-2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com