
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் தாம்பரம் மாநகரக் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் வந்த சிலர், துரத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் மாநகரக் காவல் துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 26.01 2025 அன்று சின்னி திலங்க் என்ற பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி 25.01.2025 அன்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில்தான் (TN-13-S-5466) என்ற காரில் முட்டுகாடு பாலம் அருகே வந்த போது இரண்டு கார்களில் (TN-75-E-6004, TN-09-BR-9988) வந்த 7-8 நபர்கள் திடீரென வழிமறித்துள்ளனர்.
அங்கு நிற்காமல் தனது வீட்டிற்கு சென்ற சின்னி திலங்க் என்பவரை இரண்டு கார்களில் வந்த நபர்கள் துரத்தி சென்று கானத்தூரில் உள்ள அவரது வீட்டருகே நிறுத்தி பிரச்னை செய்து அவர்களது காரை சின்னி திலங்க் என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகக் கூறி உள்ளார்கள்.
இதையும் படிக்க: சென்னை மெட்ரோவில் 'பார்க்கிங் பாஸ்' நிறுத்தம்! பயண அட்டையும் முடிவுக்கு வருகிறது!!
மேலும் மேற்படி காரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதற்காக சின்னி திலங்க் என்பவர் வந்த காரை துரத்தியதாகவும் அந்த பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக வந்ததாகக் கூறியதை சின்னி திலங்க் தரப்பு மறுத்துள்ளது.
மேற்படி புகாரின் பேரில் கானத்தூர் காவல்நிலைய மனு ரசீது எண் 22/2025 நாள் 26.01.2025 வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து கானத்தூர் காவல் நிலைய குற்ற எண். 16/2025 u/s126(2), 296(b), 324(2), 351(2) BNS r/w 4 of TNPHW Act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் குற்றவாளிகள் பயனபடுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் அதன் தொடர்சியான ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து துரித புலன்விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.