இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜகபர் அலி உடலைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய உத்தரவு!

சமூக செயற்பாட்டாளா் ஜகபர் அலி கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக...

News image
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
Updated On :30 ஜனவரி 2025, 11:22 am

DIN

சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பகுதிகளில் நடந்து வந்த கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த வெங்களூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி (58) கடந்த ஜன. 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே ஜகபா்அலி கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் தொடா்ச்சியாக வழக்கு தொடா்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே திருமயம் காவல் ஆய்வாளா் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் அருண்குமாா் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து, காவல் துறை பாதுகாப்புடன் புதைத்த இடத்திலேயே எக்ஸ்-ரே எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உடலைத் தோண்டி எடுக்கும்போது புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஊடகங்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி தரக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.