வனவிலங்கு பூங்காவில் புலியின் சிறுநீர் அமோக விற்பனை!

சீனாவின் வனவிலங்கு பூங்கா ஒன்றில் புலியின் சிறுநீர் விற்பனை செய்யப்படுவதைப் பற்றி...
சைபீரிய புலியின் 250 கிராம் அளவிலான சிறுநீர் ரூ.600 மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.
சைபீரிய புலியின் 250 கிராம் அளவிலான சிறுநீர் ரூ.600 மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.
Published on
Updated on
1 min read

சீனாவிலுள்ள வனவிலங்கு பூங்கா ஒன்றில் மருத்துவ குணம் நிறைந்தவை எனக் கூறி புலியின் சிறுநீர் விற்பனை செய்யப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்நாட்டின் சின்சுவான் மாகாணத்திலுள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு பூங்காவில் முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்து எனக் கூறி சைபீரிய புலியின் சிறுநீர் விற்பனை செய்யப்படுகிறது. 250 கிராம் பாட்டில் அளவில் சுமார் 50 யுவான் (ரூ.600) க்கு விற்பனை செய்யப்படும் இந்த புலியின் சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து மருத்துவக் காரணங்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்த பூங்காவின் நிர்வாகம் சார்பில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த பூங்கா நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் சிறுநீர் விற்பனை செய்யப்படும் பாட்டிலின் மீது முடக்குவாதம் தசை வலி உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தலாம் என அச்சிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த பூங்கா ஊழியர்களால் ஒரு பாத்திரத்தில் சேகரிக்கப்படும் புலியின் சிறுநீரை வெள்ளை நிற ஒயினுடன் கலந்து பாதிப்புள்ள உடற்பகுதியில் தடவி அதன் மீது இஞ்சி துகள்களை வைத்து வந்தால் முடக்குவாதம் தசை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் குணமாகும் என்றும் தேவைப்பட்டால் புலியின் சிறுநீரை நேரடியாக குடிக்கலாம் என்றும் அந்த பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க விமான விபத்து: இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை! 67 பேரின் நிலை?

இருப்பினும், இதனை வாங்கி பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் புலியின் சிறுநீரால் தங்களக்கு எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், புலியின் சிறுநீரில் எந்தவொரு மருத்துவ குணங்களும் இல்லை எனவும் இது போன்ற செயல்களினால் புலிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, சீனாவின் பாரம்பரியத்தில் புலிகள் துணிச்சல் மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகின்றன. அந்நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தில் புலிகளின் எழும்புகள் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.

ஆனால், புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதினால் அதனை பாதுகாக்கும் பொருட்டு புலிகளை வேட்டையாடுவதும் அதன் பாகங்களை வைத்து பின்பற்றப்படும் மருத்துவ முறைகளும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com