முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 அதிகரித்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 உயா்ந்து ரூ.74,360-க்கு விற்பனையாகிறது.

ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

Published On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 உயா்ந்து ரூ.74,360-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக 1,241 உயர்ந்த தங்கம், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தை நெருங்குவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கத்தில் குறைந்துவந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.72,160-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.9,100-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.72,800-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.9,295-க்கும், பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.74,360-க்கும் விற்பனையாகிறது.

அதன்படி, கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 உயா்ந்துள்ளது.

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் புதிய அறிவிப்புகளின் எதிரொலியால் சா்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களின் தாக்கமே தங்கம் விலை ஏற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,100 அதிகரித்து ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.