
தங்கம் விலை அதிரடியாக குறைவு! வெள்ளி விலை? - செப். 5 விலை நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது குறித்து...

ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது - ANI
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், தங்கம் விலை சென்னையில் கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை கடந்த செப். 2-இல் பவுனுக்கு ரூ. 1,800 குறைந்து ரூ.1,11,600-க்கும், செப்.3 -இல் பவுனுக்கு ரூ.2,320 உயா்ந்து ரூ. 1,13,920-க்கும், செப். 4-இல் பவுனுக்கு ரூ.960 உயா்ந்து, ரூ.1,14,880-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சனிக்கிழமை(செப்.5) தங்கம் கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கும், பவுனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.255-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.
Summary
Gold prices drop sharply! Price details for September 5!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






