புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

"நம் ஒரே இலக்கு இதுதான்": பிறந்த நாளில் முதல்வர் உறுதி மொழி

தமிழ்நாட்டின் நலனை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் என தொண்டர்கள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :1 மார்ச் 2025, 6:13 am

DIN

தமிழ்நாட்டின் நலனை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் என தொண்டர்கள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, ஹிந்தி திணைப்பை எதிர்ப்போம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.. அணணா வழியில் அயராது உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முழங்கினார்.

பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு கோபாலபுரம், சிஐடி காலனிக்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் மறைந்த முரசொலி செல்வம் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வருகை தந்த முதல்வர் கழக தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார். நீண்ட வரிசையில் நின்று கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், மக்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, "தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம்!

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்" என கழக தொண்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.