மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அய்யா வைகுண்டா் அவதார நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை

அய்யா வைகுண்டசாமியின் அவதார நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) மதுக்கடைகளை மூட வேண்டும்

News image
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை- கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2025, 11:28 am

DIN

அய்யா வைகுண்டசாமியின் அவதார நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

சமூகத்தில், ஏற்றத்தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்பதைப் போதித்த அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தினம், வரும் மார்ச் 4 அன்று கொண்டாடப்படுகிறது.

அய்யா வைகுண்டர் அவதார நாளுக்காக, ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள தென்மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய நாள் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அன்பையும், ஆன்மீகத்தையும், வலியுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார நாளன்று, மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் சார்பாக, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.