முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் நாளை(மார்ச் 14) காலை தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

மேலும், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் கடந்த ஆண்டுகளில் ரூபாய் குறியீடு(₹) இடம்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்குப் பதிலாக 'ரூ' என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இலச்சினையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை திமுக அரசு மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவரும் தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும். திமுக அரசின் தோல்விகளை மறைக்க அவர்கள் போடும் நாடகம் தொடர்கிறது.
தமிழ்நாட்டை எத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளார்கள்? இப்போது ஏன் ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளார்கள்?
திமுக எப்போதும் பிரிவினைவாதத்தையே பேசுகிறது. தேச விரோத மனநிலையுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...