காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

சுற்றுலா மாநாடு: 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சுற்றுலா மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் பற்றி...

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 1:02 pm IST

மாமல்லபுரத்தில் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் ரூ. 22,794 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 65,937 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"சுற்றுலா இடங்களில் காட்சிமுனைகளை அமைக்கவும் ஏற்கனவே இருப்பவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஆண்டுகளில் சுற்றுலா துறையை மேம்படுத்த ரூ. 612 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 3 முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறேன்.

1. உலக சுற்றுலா வரைபடத்தில் கலை மற்றும் பண்பாட்டு சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு இடம்பெற அடுத்தாண்டு ஜனவரி மாதம் போட்டிகள் நடத்தப்படும்.

2. மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான அடிப்படை வசதிகள் வழங்க, சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைத்து ரூ. 100 கோடியில் உலக தரத்திலான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.

3. 2023 ஆண்டு அறிவிப்பின்படி, சிப்காட் நிறுவனம் சுற்றுலா நிறுவனங்களை கண்டறிந்து புதிய சுற்றுலா வசதிகளை உருவாக்க உள்ளது. முதற்கட்டமாக கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தூத்துக்குடி மாவட்டங்களில் 4 சிறப்பு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முதலீடுகளை ஈர்க்க விருப்பப்பதிவு கோரிக்கைகள் அழைக்கப்பட்டுள்ளது. 2 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் 31 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பார்க், தீம் பார்க் உள்ளிட்டவை இந்த இடங்களில் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டை நோக்கி இன்னும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை வரவைக்க வேண்டும். அனைவரும் தமிழ்நாட்டுக்கு வாருங்கள். தமிழ்நாட்டை உங்களுடைய விருப்பமான இடமாக தேர்வு செய்துகொள்ளுங்கள். இயற்கை, வரலாறு, பண்பாட்டுடன் உங்களை நாங்கள் வரவேற்கிறோம். வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், திரும்பிச் செல்லும்போது மறக்க முடியாத நினைவுகள் மட்டுமின்றி அன்பு மிகுந்த சொந்தங்களுடன் திரும்பிச் செல்வீர்கள்" என்று பேசினார்.

Summary

M.K. Stalins 3 important announcements! in Tamilnadu global tourism summit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.