
எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரின் மறைவுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனி இடத்தினை கொண்டிருந்த எழுத்தாளர் திரு.நாறும்பூநாதன் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து வருத்தமுற்றோம்.
தமிழ்நாடு அரசின் உ.வே.சா விருது பெற்றவர். யானை சொப்பனம், திருநெல்வேலி நீர் - நிலம் - மனிதர்கள் உள்ளிட்ட படைப்புகளை தந்தவர். பொருநை இலக்கியத் திருவிழா - நெல்லை புத்தகத்திருவிழா உள்ளிட்டவற்றிற்காக முக்கிய பங்காற்றியவர்.
எழுத்தாளராக மட்டுமன்றி சமூக செயற்பாட்டாளராகவும் பல்வேறு பங்களிப்பினை செய்த திரு.நாறும்பூநாதன் அவர்களின் மரணம் தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தார் - உறவினர்கள் - நண்பர்கள் - வாசகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.