ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி

இதுவரை விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

News image

அமைச்சர் செந்தில் பாலாஜி

Updated On :19 மார்ச் 2025, 11:44 am IST

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை, அடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முன்பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகள் விரைவில் வழங்கப்படும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட துணை மின் நிலையங்களில் 250 துணை மின் நிலையங்களுக்கு நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள துணை மின் நிலையங்களுக்கு திட்ட அனுமதி தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் 1,599 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. பரமத்தி வேலூர் தொகுதியில் 502 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 5 துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி கொடுத்துள்ளார் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.