சவால்களை எதிர்கொண்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக புதன்கிழமை அமெரிக்காவின் ஃபுளோரிடா அருகே கடல் பகுதியில் பாராசூட்கள் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(மார்ச் 18) காலை 10.30 மணியளவில் பூமிக்கு புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 17 மணி நேர பயணத்துக்குப்பின் சுனிதா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி புதன்கிழமை (மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அதனைத்தொடர்ந்து, மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ள கப்பல், கடலில் பாதுகாப்பாக இறங்கியுள்ள டிராகன் விண்கலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.
இந்த நிலையில், ஒவ்வொரு வீரர்களாக விண்கலனிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு கப்பலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அடுத்த 30 நிமிடங்களில் அதிலிருந்து வீரர்கள் வெளியே அழைத்து வரும் பணி நிறைவடைந்தது.
அதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மனிதர்களால் விண்வெளியில் கடுஞ்சவாலான சூழலில் வாழ முடியும் என்பதை சாதித்துக் காட்டி பூமிக்கு திரும்பியள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சவால்களை எதிர்கொண்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையாக, சவால்களை எதிர்கொண்டு திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து திரும்பிய முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்று. அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல, பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது. தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவமாக சுனிதா வில்லியம்ஸ் திகழ்கிறார் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இபிஎஸ்!

கடலூரில் அதிமுக அலுவலகம் எடப்பாடி தரப்பிடம் ஒப்படைப்பு: அலுவலகப் பொருள்கள் அகற்றம்; தொண்டா்கள் அதிா்ச்சி

மெளனம் காக்கும் சி.வி.சண்முகம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



