எச்.ராஜா ஒரு மதவாத சக்தி: அமைச்சர் சேகர்பாபு

பாஜகவின் எச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி, அவர் ஒரு மதவாத சக்தி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்)
அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்)
Updated on
1 min read

பாஜகவின் எச்.ராஜா ஒரு மதவாத சக்தி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எழும்பூர் தெற்கு பகுதி சார்பில் செனாய் நகர் வைத்தியநாதன் சாலை மற்றும் சேத்துப்பட்டு, அம்பேத்கர் திடலில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,

பாஜகவின் எச்.ராஜா ஒரு மதவாத சக்தி. திமுக ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளதாகவும், திமுக ஆட்சி அமைந்து இதுவரை 2700-க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது, இந்தாண்டு இறுதிக்குள் அது மூவாயிரத்தை தாண்டும் என்று கூறினார்.

மேலும், அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை இருக்கிறதா?,பொறுப்பு அமைச்சர் யார்? என்ற கேள்வி இருந்தது என்றும், சங்கிகள் தலையிட்டு திருச்செந்தூர் கோவில் விவகாரத்தை திசை திருப்புவதாகவும், ஆகம விதிகளின்படி இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோவில்களில் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து 17 கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதாகவும் குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறை உள்ளது என்றார்.

எதிர்பாராத நடக்கும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது, சட்டம்-ஒழுங்கு அவர்களுடைய குற்றச்சாட்டு, திமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது, பாஜகவினர் பல பரிட்சைக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியவர் அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்ட-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com