போதைத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது!

கேரளத்தில் காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டயத்தின் மரங்காட்டுப்பள்ளி எனும் கிராமத்தில் போதைப் பொருள் விநியோகம் செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், மரங்காட்டுப்பள்ளி போலீஸார் நேற்று (மார்ச் 20) இரவு 7 மணி அளவில் அக்கிராமத்தின் வயலா வெல்லாக்கல் எனும் பகுதியில் சோதனை செய்துள்ளனர்.

இதையும் படிக்க: கர்நாடகம்: 18 பாஜக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி இடைநீக்கம்!

அப்போது, அப்பகுதியில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் அந்த காவலர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மஹேஷ், சரத் மற்றும் ஷியாம் குமார் ஆகிய மூன்று காவலர்கள் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, நிலைமை மோசமடைந்ததினால் கூடுதல் காவலர்கள் அங்கு அனுப்பப்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட 6 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com