தென் கொரியாவின் தென்கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் 4 பேர் பலியாகியுள்ளனர்.
சான்சியோங் மாகாணத்தின் வனப்பகுதியில் கடந்த மார்ச் 21 அன்று ஏற்பட்ட காட்டுத் தீயானது அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பல்வேறு பகுதிக்குகளுக்கு பரவியுள்ளது. இதனால், தற்போது 5 பேர் பலியானதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் 6க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அப்பகுதியில் நிலவும் வறண்ட வானிலையினால் காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி மக்களின் உயிரை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு மீட்புப் படையினர் 30க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களின் உதவியுடன் அந்த தீயை அணைக்க போராடி வருகின்றனர். இன்று (மார்ச் 23) அதிகாலை நிலவரப்படி 30 சதவிகித காட்டுத் தீயானது அணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இந்த காட்டுத் தீயினால் 3,286.11 ஹெக்டேர் அளவிலான நிலம் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு கியோங்சாங் மற்றும் சான்சியோங் மாகாணத்தில் 1,000 ஹெக்டேர் அளவிலான நிலம் தீயினால் முற்றிலும் அழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டுக்குகள் நீலகிரி காட்டுத் தீ: வனத் துறை விளக்கம்
இரட்டை இலக்க வளர்ச்சி! சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி நிச்சயம்: அமைச்சர் டிஆர்பி ராஜா

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


