
ஆம்பூர்: ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் வியாழக்கிழமை திடீரென பலத்த வெடி சப்தம் கேட்டதால், கிராம மக்கள் அச்சமடைந்தனா்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சின்னவரிகம், வெங்கடசமுத்திரம், மிட்டாளம், வன்னிநாதபுரம், கரும்பூர், குமாரமங்கலம், வடச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் வியாழக்கிழமை காலை சுமார் 11 மணிக்கு திடீரென பலத்த வெடி சப்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். திடீரென கேட்ட வெடி சப்தத்தால் மக்கள் அச்சமடைந்தனா். நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, தங்களுக்கும் வெடி சப்தம் கேட்டதாகவும், இது குறித்து உரிய துறை அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் உறுதியான பிறகே முழு விவரம் தெரிய வரும் என அவர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.