தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே: அன்பில் மகேஸ்

தோ்வு முடிவுகள் மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

News image

அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) - ENS

Updated On :8 மே 2025, 8:51 am IST

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், “இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஏப். 17-ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமை (மே 8) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடவுள்ளாா்.

இதையடுத்து மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், அவா்கள் பள்ளியில் சமா்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு அவா்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தபோது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், “இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி வியாழக்கிழமை(மே.8) பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம்.

முதல்வரின் கூற்றுப்படி “இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்.

மதிப்பெண்களை அளவாக கொள்ளாமல், தங்களின் திறமைகள் சார்ந்த துறைகளில் மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு. மாணவர்களே… உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது. வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.