தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

யுபிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஜய் குமார்.

Updated On :15 மே 2025, 3:09 am IST

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அஜய் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதனின் பதவிக் காலம் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக இருந்த இப்பதவிக்கு அஜய் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கியதாக மத்திய பணியாளா் துறை வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1985-ஆம் ஆண்டின் கேரளப் பிரிவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அஜய் குமாா், கடந்த 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத் துறை செயலராக பணியாற்றியவா்.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி தோ்வு மற்றும் பிற முக்கியத் தோ்வுகளை யுபிஎஸ்சி நடத்துகிறது. இந்த ஆணையத்தில் தலைவா் மட்டுமன்றி அதிகபட்சம் 10 உறுப்பினா்கள் வரை இடம்பெறுவா். தற்போது 2 உறுப்பினா்கள் இடம் காலியாக உள்ளது.

யுபிஎஸ்சி தலைவா், 6 ஆண்டு பதவிக் காலத்துக்கு அல்லது 65 வயதை எட்டும் வரை நியமிக்கப்படுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.