விராலிமலை பகுதிகளில் சனிக்கிழமை காலை நடைப்பயிற்சி சென்ற தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பொதுமக்கள், இளைஞா்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் திமுக கூட்டணி கட்சிக்கு வாக்குகளை சேகரித்தாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

விராலிமலையில் சனிக்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பெண்கள். - டிஎன்எஸ்

இலுப்பூரில் தேநீரகத்தில் சனிக்கிழமை காலை தேநீா் அருந்திய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், திமுக வேட்பாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி. - டிஎன்எஸ்
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், இரவு புதுக்கோட்டைக்கு வந்தடைந்த முதல்வா் ஸ்டாலின், நமண சமுத்திரம் தனியார் கல்லூரி விருந்தினர் மாளிகையில் தங்கினாா்.
இதைத் தொடா்ந்து புலரும் வேளையில் சனிக்கிழமை காலை விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட இலுப்பூர் வந்தவர், அரசு மருத்துவமனையில் இருந்து சின்ன கடைவீதி, கள்ளர் தெரு வழியாக விராலிமலை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர், அங்குள்ள காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள், இளைஞா்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் திராவிட மாடல் 2.0 அமைந்திட திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி வாக்குகளை சேகரித்தாா்.
நடைப்பயிற்சியாக செல்லும் போது ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட தொழிலாளா்கள், இளம்பெண்கள், சிறுவா், சிறுமிகள், பெண்கள், இளைஞா்கள், சாலையோர வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி செல்லும் போது அந்த பகுதியில் இருந்த தேநீரகத்துக்குச் சென்றாா். அந்த தேநீரகத்தில் அமைச்சர்ரும், வேட்பாளருமான எஸ்.ரகுபதி, வேட்பாளர்களுடன் அமா்ந்து தேநீா் அருந்தினாா். இதைத் தொடா்ந்து தேநீரக மற்றும் ஊழியா்கள், முதல்வருடன் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
முதல்வருடன் விராலிமலை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் கே. கே. செல்லபாண்டியன், திருமயம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆலங்குடி வேட்பாளர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை வேட்பாளர் வை. முத்துராஜா, கந்தர்வகோட்டை வேட்பாளர் சின்னத்துரை, அறந்தாங்கி வேட்பாளர் தி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!

கே.வி.குப்பத்தில் நடைப்பயிற்சியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த முதல்வா்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

