4 நாள்களில் சவரனுக்கு ரூ. 3,120 உயர்வு.. புதிய உச்சத்தில் தொடரும் தங்கம்!
தங்கம் விலை கடந்த நான்கு நாள்களில் சுமார் ரூ.3,120 வரை உயர்ந்து புதிய உச்சத்தில் தொடர்கிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,06,320-க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,120 உயர்ந்துள்ளது.
இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
ஜன. 12 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.1 லட்சத்து 4,960-க்கும், ஜன. 13-ல் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1 லட்சத்து 5,360-க்கும் நேற்று (ஜன.14) சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ. 1 லட்சத்து 6,240-க்கும் விற்பனையானது.
இந்த வாரத்தின் நான்காவது நாளான இன்றும் (ஜன.15) கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,290-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,06,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொழிற்சாலை பயன்பாட்டில் வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெள்ளி மீதமான முதலீடு அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக வெள்ளி விலை தங்கத்துக்கு நிகராக உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.310-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 3,000 உயர்ந்து ரூ. 3.10 லட்சத்துக்கும் விற்பனையானது.
தங்கம் கடந்து வந்த பாதை (ஒரு சவரன் விலை)
ஜனவரி 15 - ரூ. 1,06,320
ஜனவரி 14 - ரூ. 1,06,240
ஜனவரி 13 - ரூ. 1,05,360
ஜனவரி 12 - ரூ. 1,04,960
ஜனவரி 11 - ரூ. 1,03,200
உலகளாவிய வர்த்தக பதற்றம், அமெரிக்காவின் வரிவிதிப்பு, ஈரான் போர்ப் பதற்றம் உள்ளிட்டவற்றால் தங்கம் வெள்ளி ஆகியவற்றின் மீதான முதலீடு அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் மற்றும் மக்கள் மீண்டும் கலக்கமடைந்துள்ளனர்.
The price of gold has risen by approximately Rs. 3,120 in the last four days and continues to remain at a new peak.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

