வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம்: மேயர் பிரியா விளக்கம்

வடிகாலில் கொசுவலை போர்த்தியது மாநகராட்சி அறிவிப்பாளர் செய்யப்பட்டது இல்லை என்று மேயர் பிரியா அளித்த விளக்கம் தொடர்பாக...
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
Updated on
2 min read

சென்னை: வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் மாநகராட்சி அறிவிப்பாளர் செய்யப்பட்டது இல்லை. மாமன்ற உறுப்பினர் அறிவுறுத்தல் பேரில் செய்திருக்கிறார்கள் என்று மேயர் பிரியா விளக்கம் அளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசியது குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவை நடக்கும்பொழுது பதில் அளிக்க முடியாது என்று தவிர்த்து சென்றார்.

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் ஆடுதொட்டி புச்சர் கிரவுண்ட் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா,

கடந்த 125 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் இங்கிருந்து வாங்கி சென்று சில்லறை விற்பனை கூடங்களில் விற்கும் அளவிற்கு பெரிய அளவிலான ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி கூடமாக செயல்பட்டு வந்தது.

முதல்வர் ஆணைப்படி சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து இந்த ஸ்மார்ட் ஹவுஸ் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இங்கு இருந்த ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி கடைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.53 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி மாதத்திற்குள் மக்கள் பணிக்கு முழுவதும் கொண்டுவரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இங்கு வரும் கழிவுகள் மூலம் ஏற்படும் துர்நாற்றத்தால் முன்பு இங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அது தற்பொழுது நவீன தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்து மழைநீர் வடிகால் மூலம் வெளியேற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டு இறைச்சி சில்லறை விற்பனையாளர்கள் இந்த பகுதியில் கடை ஒதுக்க மனு அளித்தது குறித்த கேள்விக்கு, இது முற்றிலும் ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி வெட்டப்பட்டு வெளியில் எடுத்து சென்று தான் சில்லறை கடைகள் வைக்க இடம் கிடையாது சென்னையில் புளியந்தோப்பு மற்றும் சைதாப்பேட்டை பகுதியில் இடங்களில் உள்ளது. இந்த பகுதியில் முற்றிலும் ஆடுகளை வெட்டி வெளியில் கொண்டு போய் விற்பனை செய்வதற்கு தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வடிகால் பகுதியில் கொசுவலை மாநகராட்சி ஊழியர்கள் வைப்பது போன்ற காணொளி வெளியானது குறித்த கேள்விக்கு, மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்ட விஷயம் இது கிடையாது. அது கொசுக்களுக்காக போடப்பட்டது இல்லை மாமன்ற உறுப்பினர் கொடுத்த யோசனை பேரில் செய்திருக்கிறார்கள் இது அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை என்று அவர் கூறினார்.

Summary

The issue of covering the drain with a mosquito net: Mayor Priya's explanation

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்!! - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com