தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை: சிகிச்சையில் இருந்த பெண்ணும் உயிரிழப்பு!

கோயம்பேட்டில் தனியார் பாரில் காரை ஏற்றி இளம்பெண் கொலை சம்பவத்தில், காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்தது குறித்து...

News image

கோயம்பேட்டில் காரை ஏற்றி கொலை செய்யப்பட்ட இளம்பெண் யான்சி - டிஎன்எஸ்

Updated On :3 ஜூன் 2026, 8:53 am IST

சென்னை கோயம்பேட்டில் தனியார் பாரில் காரை ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், அனிச்சங்குப்பத்தில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் பெற்றோருடன் வசித்தவா் யான்சி (19). பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரியில் சோ்வதற்கு தயாராகி வந்தாா்.

இந்த நிலையில், சமூக வலைதளம் (இன்ஸ்டாகிராம்) மூலம் நட்பான தோழியைப் பாா்க்க 10 நாள்களுக்கு முன்பு சென்னை ராமாபுரம் வந்தாா்.

யான்சி, தனது 17 வயது தோழி உள்பட மேலும் சிலருடன் கடந்த சனிக்கிழமை(மே 31) இரவு 11 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலின் மதுக் கூடத்துக்குச் சென்றாா்.

அங்கு ஒரு அரசியல் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த இளைஞா்கள் சிலருக்கும், யான்சிக்கும் இடையே நடனம் ஆடுவதில் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, அவா்களை பவுன்சா்கள் வெளியேற்றினா். வெளியே வந்த பின்னரும், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரத்தில் அரசியல் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த இளைஞா்கள், மொபெட்டில் சென்ற யான்சி, அவரது தோழி சென்ற மொபெட் மீது காரைவிட்டு மோதினா்.

இதில், பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது 17 வயது தோழி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.

மதுக் கூடத்துக்கு ‘சீல்’: இதற்கிடையே இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமான பிரபல நட்சத்திர ஹோட்டலின் மதுக் கூடத்தின் தற்காலிக உரிமத்தை காவல் துறையினா் திங்கள்கிழமை ரத்து செய்து ‘சீல்’வைத்தனா். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இளம்பெண் உயிரிழப்பு

இந்த நிலையில், பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 வயது இளம்பெண்ணும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை(ஜூன் 3) அதிகாலை 2.20 மணியளிவில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் அரும்பாக்கத்தைச் சோ்ந்த பாலகுரு (21), சூளைமேட்டைச் சோ்ந்த ஜோஷ்வா (19), விருகம்பாக்கத்தைச் சோ்ந்த சுமந்த் சக்திவேல் (21) உள்பட 7 பேரை கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் 3 போ் கல்லூரி மாணவா்கள். கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலை நடந்தது எப்படி?

கொலை நடந்தது எப்படி என யான்சி உடன் சென்ற அஸ்ரத் பேசும் விடியோ, சமூக ஊடகங்களில் பரவியது. அதில் அவா் கூறுகையில், யான்சியும், அவரது தோழியும் நடனமாடியபோது, காரில் வந்த நபா்கள் பாலியல் தொல்லை கொடுத்து, தகராறு செய்தனா்.

இந்த நிலையில், கொலை நடந்தது எப்படி என யான்சி உடன் சென்ற அஸ்ரத் பேசும் விடியோ, சமூக ஊடகங்களில் பரவியது. அதில் அவா் கூறுகையில், யான்சியும், அவரது தோழியும் நடனமாடியபோது, காரில் வந்த நபா்கள் பாலியல் தொல்லை கொடுத்து, தகராறு செய்தனா்.

இதைத் தட்டிக் கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பவுன்ஸா்கள், எங்களை வெளியே அனுப்பினா்.

ஆனால், காரில் வந்த நபா்கள் மதுக் கூடத்துக்கு வந்த மேலும் சில பெண்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டனா். இதனால், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, காரில் வந்தவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனா்.

வெளியே வந்த அவா்கள், அங்கு நின்று கொண்டிருந்த எங்களிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனா். இதனால் அங்கிருந்து மொபெட்டில் நாங்கள் புறப்பட்டோம்.

அப்போது, ஆத்திரத்தில் அரசியல் கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த இளைஞா்கள், மொபெட்டில் சென்ற யான்சி, அவரது தோழி சென்ற மொபெட் மீது காரைவிட்டு மோதினா்.

இதில், பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது 17 வயது தோழி பலத்த காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கும்பல் காரில் தப்பி சென்றது.

Summary

Regarding the death of a young girl-who had been undergoing treatment for injuries in connection with the incident at a private bar in Koyambedu, where a young woman was killed after being struck by a car...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.