ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வார பலன்கள் (ஜூன் 5 - 11) 12 ராசிகளுக்கும்! லாபம் அடையும் ராசி எது?

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

ஜோதிடம் - DPS

Updated On :5 ஜூன் 2026, 12:20 pm IST
Updated On :5 ஜூன் 2026, 12:20 pm IST

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 5 - 11) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அரவணைத்துச் செல்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் இணக்கமாக நடந்துகொள்வீர்கள். விவசாயிகள் தங்கள் பணிகளில் புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள்.

அரசியல்வாதிகள் சில அலைச்சல்களுக்குப் பிறகு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் துறையில் இருக்கும் போட்டிகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.

பெண்களுக்கு உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். மாணவர்கள் தைரியமாக விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். அரசாங்கத்தில் இருந்து உதவிகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பயணங்களில் நன்மை உண்டாகும். வியாபாரிகள் தந்திரமான சில செயல்பாடுகளால் லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் பேச்சில் கவனத்துடன் இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு துறையில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

பெண்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும்.

விவசாயிகளுக்கு கையிருப்புப் பொருள்களால் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் கட்சிப் பிரசாரங்களில் புதிய அணுகுமுறைகளைக் கையாளுவீர்கள்.

கலைத்துறையினரின் மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். பெண்கள் புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு சக மாணவர்களின் உதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - ஜூன் 5, 6.

4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்படும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளை நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுப்பார்கள்.

விவசாயிகள் கால்நடைகளை நல்ல முறையில் பராமரிப்பீர்கள். அரசியல்வாதிகள் முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவீர்கள். கலைத்துறையினரின் செல்வாக்கு துறையில் அதிகரிக்கும்.

பெண்களுக்குப் புதுமையான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 7, 8.

5சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

உழைப்புக்கேற்ற வருமானம் வரத்தொடங்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் புதிய இடங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள்.

விவசாயிகள் புதிதாக கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள்.

கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் நேசமாகப் பழகுவீர்கள். பெண்கள் கணவரின் கடினமான தருணங்களில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் சக மாணவர்களின் தவறுகளைத் திருத்திவிடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 9, 10.

6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்களைத் திருத்தமாகச் செய்து முடிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளிடையே கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு அனைத்து விவசாயப் பணிகளும் சுமுகமாக முடியும்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் கெüரவம் பாதிக்கப்படாது. கலைத்துறையினர் உற்சாகமான மனநிலையில் பணியாற்றுவீர்கள்.

பெண்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிறையக் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 11.

7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

மன உறுதியும், தன்னம்பிக்கையும் கூடும். பணவரவு நன்றாக இருக்கும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகள் ஒற்றுமை ஓங்கும். விவசாயிகளுக்கு தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சியில் சில எதிர்ப்புகளைக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும்.

பெண்களுக்குக் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிராகச் சதி செய்தவர்கள் அடங்கி விடுவார்கள். வியாபாரிகளின் பேச்சுக்குக் கூட்டாளிகள் மதிப்பு கொடுப்பார்கள். விவசாயிகள் இடைத்தரகர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் செயல்களை சரியாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.

பெண்கள் உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பெரிய காரியங்களையும் திறம்படச் செய்து முடித்துவிடுவீர்கள். தொழிலில் வாய்ப்புகள் குவியும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். வியாபாரிகள் புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை எவரிடமும் பேசமாட்டார்கள். கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும்.

பெண்களுக்கு ஆரோக்கியம் பளிச்சிடும். மாணவர்கள் சக மாணவருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு செயல்படுவீர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வருமானத்தில் உயர்வைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு வியாபார சங்கங்களில் பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடாமலேயே வந்து சேரும்.

அரசியல்வாதிகளின் பேச்சுக்கு தொண்டர்களிடம் வரவேற்பு கிடைக்கும். கலைத்துறையினர் கூடுதல் வருமானத்தைப் பெறுவீர்கள்.

பெண்கள் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் பரிசு பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு, கெüரவம் உயரும். தொழிலில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் நீங்கும். வியாபாரிகள் தங்கள் புதிய திட்டங்களை கூட்டாளிகளிடம் விளக்குவார்கள். விவசாயிகள் தங்கள் எண்ணங்களைச் சாதித்துக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் பொறுப்புடனும் பொறுமையுடனும் செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் முழுமையாகக் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மாணவர்கள் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். விருப்பமான இடங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சில முக்கிய அதிகாரிகள் கருணை காட்டுவார்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் புதிய தொண்டர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week ( June 5 - 11). Read and benefit.