இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கூகுள் கணக்கு தொடங்குகிறீர்களா? புதிய நிபந்தனை வருகிறது!

புதிதாக கூகுள் கணக்குகளைத் தொடங்குவோருக்கு...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :15 மே 2026, 6:14 pm IST

புதிதாக கூகுள் கணக்கைத் தொடங்கும் பயனர்கள், தங்களுடைய மொபைல் எண்ணை இணைக்காவிட்டால் 15 ஜிபி இலவச ஸ்டோரேஜ் இனி கிடையாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் மேப் என கூகுளின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த கூகுள் கணக்கு தேவைப்படுகிறது.

அவ்வாறு தொடங்கப்படும் கூகுள் கணக்குகளில் இதுவரை 15 ஜிபி வரை இலவச சேமிப்பகம் (ஸ்டோரேஜ்) வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேலாக ஸ்டோரேஜ் தேவைப்படுவோர் பணம் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது. ஆப்பிள் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் கூகுள் இலவசமாக அதிக ஸ்டோரேஜ் வழங்குவதால் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கூகுளில் இலவச ஸ்டோரேஜுக்கு சில கட்டுப்பாடுகள் வரவுள்ளன. கூகுள் கணக்கைத் தொடங்கும்போது தங்களுடைய மொபைல் எண்ணை உள்ளிடாவிட்டால் / இணைக்காவிட்டால் 15 ஜிபி-க்குப் பதிலாக 5 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

கூகுள் இதனை சோதனை முறையில் செய்து வருவதாக 'ரெட்டிட்' தளத்தில் பயனர்கள் கூறினர்.

இந்நிலையில் கூகுள் தற்போது இதனை உறுதிப்படுத்தியுள்ளது. புதிதாகத் தொடங்கும்போது மொபைல் எண்ணை இணைக்காதவர்களுக்கு 5 ஜிபியும் மொபைல் எண்ணை இணைத்தால் 15 ஜிபியும் வழங்கும் சோதனையை சில பகுதிகளில் சோதனை முறையில் அமல்படுத்தியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

பழைய கணக்குகளுக்கு இந்த புதிய விதி பொருந்தாது எனக் கூறப்படுகிறது. அதனால் ஏற்கெனவே கூகுள் கணக்கு தொடங்கியவர்களுக்கு பாதிப்பு இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

பயனர்களுக்குத் தொடர்ந்து உயர்தர ஸ்டோரேஜ் சேவையை வழங்குவதோடு, கூகுள் கணக்கின் பாதுகாப்பு, தரவு மீட்பு வழிமுறைகளை மேம்படுத்தும்பொருட்டு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூகுள் கூறியுள்ளது.

Summary

Google admits testing 5GB free storage for new accounts who is not linked mobile number

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.