மண் மணம் மாறாத நம்ம ஊர் பலகாரங்கள்!

பாரம்பரிய நம்ம ஊர் கிராமத்துப் பண்டங்கள், நமது ஊரின் பெருமை மிகு அடையாளங்களான திருவில்லிபுத்தூர் பால்கோவா, தூத்துக்குடி மக்ரூன் போன்ற பண்டங்கள் என தமிழகத்தின் பாரம்பரிய பண்டங்களின் சங்கமமாக இருக்கிறது
மண் மணம் மாறாத நம்ம ஊர் பலகாரங்கள்!
Published on
Updated on
2 min read

தமிழ் இளைஞர்களின் இந்த புதுமையான தொழில் முயற்சி எதனால் அனைவராலும் பாராட்டப்பெறுகிறது?

நல்ல நோக்கமும் முயற்சியும் 

காக்னிசன்ட், hp என பெரு நிறுவனங்களில் பல லட்சங்கள் சம்பளத்துடன் பணியில் இருந்த நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள், தங்களின் பணியினை விடுத்து தொழில் முனைய வேண்டுமெனில் கண்டிப்பாக ஒரு தெளிவான நோக்கம் இருக்க வேண்டும்.

அப்படி வெளிநாட்டு வேலையினை விடுத்து நம் கரூரில் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையதளத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் நம்ம ஊர் தமிழ் இளைஞர்கள்.

நமது முயற்சிகள் நம் சமூகப் பொருளாதாரத்தை மையப்படுத்த வேண்டும் 

இவ்வளவு ரிஸ்க் எடுத்து இதனை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்று கேட்டபோது, ‘நமது மென்பொருள் பெரு நிறுவன வேலைகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவங்களுக்கான சேவைத் துறையாகவே இருந்து வருகின்றன. அதில் பணிபுரிந்து நல்ல சம்பளம் பெற்றாலும் எமது கல்வியும், சிந்தனையும் எம்மை வளர்த்தெடுத்த சமூகத்துக்கான பயன்பாடாக இல்லாமல் இருந்தது ஒரு பெரும் உறுத்தலாக இருந்தது. எனவே நம் சமூகப் பங்களிப்புடன் கூடிய ஒரு தொழில் வாய்ப்பினை கருத்துருவாக்கம் செய்து நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையதளத்தை நிறுவினோம். நம்ம ஊர் பாரம்பரிய கிராமியப் பண்டங்களை உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் ஒரு முயற்சிதான் இது.

இதனைச் செய்யும்பொழுது எமது கல்வியும், சிந்தனையும் நமது சமூகத்துக்குப் பயனுடையதாக இருப்பது நிம்மதி தருகிறது. விளிம்பு நிலையில் உள்ள நல்ல திறமையான நம்ம ஊர் பண்டங்களை மண் மணம் மாறாமல் செய்யும் குடும்பங்களின் பொருளாதாரத்தினை நிலைப்படுத்த உதவுகிறது. இந்த ஒரு வருடத்தில் குறைந்தது 5 குடும்பங்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தி இருக்கிறோம்’ என்று மகிழ்வுடன் பகிர்கிறார் பார்த்திபன் வேலுச்சாமி.

தரமாக வழங்கப்படும் சேவைகள்

பாரம்பரிய நம்ம ஊர் கிராமத்துப் பண்டங்கள், நமது ஊரின் பெருமை மிகு அடையாளங்களான திருவில்லிபுத்தூர் பால்கோவா, தூத்துக்குடி மக்ரூன் போன்ற பண்டங்கள் என தமிழகத்தின் பாரம்பரிய பண்டங்களின் சங்கமமாக இருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் என்ற இணையதளம்.

ஒரே நாளில் தமிழகம் முழுவதும் டெலிவரி செய்கிறார்கள். இரண்டே நாட்களில் அமீரகத்தில் டெலிவரி, நான்கே நாட்களில் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நேரடி டெலிவரி என அசத்துகிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் என்ற இணையதளம்.

தங்களின் பெரு நிறுவன அனுபவத்தை சரியான முறையில் பயன்படுத்தி நமது ஊரின் உற்பத்தி பொருளாதாரத்தினை பெருக்கும் ஒரு சிறு முயற்சியாக இது பாராட்டுக்குரியது.

சிறப்பான தீபாவளி பரிசளிப்புகள் 

இந்தத் தீபாவளிக்கு "ருசியமுத பெட்டகம்", "பேர் உவகை பெட்டகம்" என சிறப்பு இனிப்புப் பெட்டகங்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் NSDEEPAM20 கூப்பனைப் பயன்படுத்தி 20% தள்ளுபடியில் தீபாவளிப் பெட்டகங்களை முன்பதிவு செய்யலாம். மேலும், நிறுவங்களுக்குப் பொருத்தமான - பரிசு இனிப்புப் பெட்டகங்களை ஆர்டர் செய்ய +8012444264 என்ற நேரடி எண்ணில் தொடர்புகொண்டு சிறந்த விலையில் தீபாவளிப் பரிசுப் பெட்டகங்களை புக் செய்யலாம்.

நல்லதொரு புது முயற்சியில் முன்னேறி வரும் தமிழ் இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com