வீட்டுப் பராமரிப்பில் எலுமிச்சை ஒரு வரப்பிரசாதம்!

வீட்டுப் பராமரிப்பில் எலுமிச்சை சாறும் அதன் தோலும் பெரிய அளவில் பயன்படுத்துவது குறித்து..

19.4.2026:TIRUNELVELI:STANDALONE:-Puliyangudi, popularly known as the "Lemon City" is witnessing a sharp rise in lemon prices as temperatures soar day

எலுமிச்சை - ENS

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:56 pm IST

சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைக் கலந்து கொதிக்க வைத்தால், நெய் கெடாது.

எலுமிச்சை சாறு பிழிந்த பிறகு தோலை தூக்கி எறிய வேண்டாம். எலுமிச்சைப் பழத் தோலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், நாற்றம் உண்டாகாது.

கடலை மாவும், எலுமிச்சைப் பழச்சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் வெள்ளி நகைகள் பளபளப்படையும்.

வீட்டில் வசதி இருப்பவர்கள் எலுமிச்சை தோல்களை காய வைத்து மிக்சிஸில் அறைத்து சபீனாவுடனும் அல்லது பூஜை பொருள்கள் தேய்க்கவும் பயன்படுத்தலாம்.

சாறு பிழிந்த பிறகு எலுமிச்சை தோலை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரைக் கொண்டு ஸ்டவ், சமையல் மேடையை துடைத்தால் பளபளவென இருக்கும்.

எலுமிச்சை தோலைக்கொண்டு சில்வர் குழாய்களைத் தேய்த்துவிட்டு கழுவினால் மின்னும்.

பூஜை சாமான்களைத் தேய்க்க புளி பயன்படுத்துவோர் அதற்கு மாற்றாக எலுமிச்சையை பயன்படுத்தலாம்.

வீட்டை துடைக்கும்போது கடைகளில் விற்கும் சோப்பு திரவங்களைத் தவிர்த்து எலுமிச்சை சாறும் உப்பு, மஞ்சள் கலந்து துடைத்து எடுக்கலாம்

எலுமிச்சை அதிகம் கிடைக்கும்போது அதனை பிழிந்து சாறு எடுத்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் பூஜை பொருள்கள் தேக்க தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.