

வீட்டின் நுழைவு வாயில் மற்றும் ஜன்னல்களுக்கு திரை எனப்படும் ஸ்க்ரீன் போடும் வழக்கம் இருப்பவர்கள் சில முக்கிய விவரங்களையும் கவனிக்க வேண்டும்.
திரை என்பதை ஒரு முறை வாங்கி மாட்டிவிட்டால் போதும் என்று நினைக்கக் கூடாது. அதனை கால நிலைக்கு ஏற்ப மாற்றியமைப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு நல்லது.
வீட்டில் பொதுவாக ஸ்கிரீன் அமைக்கும் போது வெளியில் இருந்து பார்த்தால், அறைக்குள் இருப்பவை தெரியாமலும், புற வெளிச்சம், வெப்பம் ஆகியவை அறைகளுக்குள் பரவாதவாறும் ஸ்கிரீன்கள் அமைக்க வேண்டும்.
அதே வேளையில் தேவையான அளவு காற்றோட்டம் வரும் வகையிலும் இருக்க வேண்டும்.
ஸ்கிரீன்களை தேர்வு செய்யும்போது, அதை மாட்டும் கம்பிகளையும் தேர்வு செய்வது அவசியம்.
அதாவது, வெய்யில் அதிகம் வரும் நேரத்தில் அவற்றை பயன்படுத்திக் கொண்டு, மற்ற நேரத்தில் அவற்றை சுருட்டி வைக்கவும் இயலும்.
வெளியிலிருந்து வரும் தூசிகள் ஸ்கிரீன்களில் படியும். மாதத்துக்கு ஒரு முறையாவது ஸ்கிரீன்களை துவைப்பது அவசியமாகும்.
பால்கனி போன்ற அதிக வெயில் வரும் இடங்களில் மூங்கில் அல்லது வெட்டிவேரால் தயாரிக்கப்படும் ஸ்கிரீன்களை போடலாம்.
வரவேற்பறைக்கு வெளிச்சம் வரும் வகையில் அழகிய வேலைபாடுகள் கொண்ட ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
படுக்கையறைக்கு வெளிச்சத்தை மறைக்கும்படி திக்கான துணியில், டார்க் நிறத்தில் இருக்க வேண்டும். அதனால் இரவில் வெளிச்சம் வராமல் இருக்கும்.
ஒரே நிறத்தில் அனைத்து திரைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலில் இருக்கும் ஒவ்வொரு அறையைப் பொருத்து திரைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
திரைகளின் தரம், விதவிதமான அளவில் ரெடிமெட் ஸ்கிரீன்களும் கடைகளில் கிடைகின்றன.
ஸ்கிரீன்கள் பருத்தி, பாலியஸ்டர்மிக்ஸ், பாலியஸ்டர், வெல்வெட் கலந்த பாலி சில்க் போன்ற துணி வகைகளில் தற்போது அதிகம் இருக்கிறது.
திரைகள் பிரதான ஸ்கிரீன், மெல்லிய துணி ஸ்கிரீன், இரண்டடக்கு ஸ்கிரீன் (மெல்லிய, பிரதான ஸ்கிரீன்), என மூன்று வகைகள் உள்ளன.
வீட்டுச் சுவரின் நிறத்தையும், சோபாவின் நிறத்தையும் பொருத்து திரைகளின் நிறத்தை தேர்வு செய்வது அழகைக் கூட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.