ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சுத்தமான சமையலறைக்கு வெறும் நான்கே டிப்ஸ்

சுத்தமான சமையலறையை வெறும் நான்கே டிப்ஸ் இருக்கிறது.

<P>Young pregnant woman cooking healthy meal food vegetables in the kitchen. Lifestyle background. Horizontal</P>

சமையலறை - Center-Center-Chennai

Published On :4 ஜூலை 2026, 4:23 pm IST

சுவையான, சத்தான சமையல் தயாராகும் சமையலறை, எப்போது சுத்தமாக இருக்க வேண்டும். சிலர் சமையல் செய்துகொண்டே, சமையலறையை சுத்தம் செய்வதையும் மேற்கொள்வார்கள்.

சிலரோ, சமையலறை அழுக்கடையாமலேயே சமையலை செய்து முடித்துவிடுவார்கள். சமையலை முடித்துவிட்டு சுத்தம் செய்வதும் ஒரு விதம். எப்படியாகினும் சமையலறை தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்.

அப்போதுதான், அங்குத் தயாரிக்கப்படும் உணவும் நல்ல முறையில் இருக்கும்.

சிங்க்-தான் கிங்

சிங் எப்போதுமே அழுக்கடைந்த பாத்திரங்களால் நிறைந்திருக்கும். எனவே, இங்குதான் பாக்டீரியாக்கள் பெருகும். எனவே, அதனை பேக்கிங் சோடா - வினிகரை சேர்த்த கரைசலைக் கொண்டு தேய்த்துவிட்டு 15 நிமிடங்கள் ஊறவிட்ட பிறகு குளிர்ந்த நீரால் கழுவி எடுங்கள். இவ்வாறு வாரத்துக்கு ஒரு முறையாவது செய்தால் பாக்டீரியாக்கள் சேராமல் தடுக்கலாம்.

ஷெல்ப்கள் தான் சமையலறையின் லைஃப்

சமையலறையில் இருக்கும் அலமாரிகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிலர் பேப்பர் போட்டு அதன் மீது டப்பாக்களை வைப்பார்கள். இந்த பேப்பர்களை மாதத்துக்கு இரு முறை மாற்றவும்.

மாதத்துக்கு ஒரு முறை அலமாரிகளில் இருக்கும் அனைத்தையும் எடுத்துவிடு துடைத்து ஈரம் காயவிட்டு பிறகு பொருள்களை அடுக்கினாலே போதுமானது.

சமையலறை மேடை

சமையல் செய்யும் மேடை மீது உப்புத் தூளை தூவி விட்டு சில நிமிடங்கள் கழித்து தேய்த்துக் கழுவிப் பாருங்கள். சுத்தமாக இருக்கும். பிறகு சமையல் பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்துவதைக் கொண்டு சுத்தப்படுத்தலாம்.

இந்த இடத்தை கழிப்பறையை சுத்தப்படுத்தும் சோப்பு லிக்விட்களைக் கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது.

குப்பைத்தொட்டிதான் முதல் வில்லன்

நாமே குப்பைத் தொட்டிக்குள் குப்பைகளைப் போட்டுவிட்டு அதனைப் பார்த்து முகம் சுளிக்கக் கூடாது. நாள்தோறும் இரவு அல்லது பகலில் குப்பைத் தொட்டிகளை சிறிது நேரம் தண்ணீர் ஊற்றிக் கழுவி ஆறவிட வேண்டும்.

குப்பைத் தொட்டிக்குள் கவர் போட்டாலும் கூட, அதற்கு முன்பு நாளிதழ் பேப்பர்களை போட்டு வைத்தால் எளிதாக சுத்தப்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.