பொதுவாக கைகளால் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவுவதுதான் இந்தியாவில் உள்ள வீடுகளில் தற்போது நடைமுறையில் இருக்கும் பழக்கம். ஆனால், இப்போது மெல்ல டிஷ்வாஷர்கள் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், அதற்காக எல்லோருமே டிஷ்வாஷர்கள் வாங்கி வைத்துக் கொள்ள முடியாது. நாள்தோறும் வீட்டில் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
பொதுவாகவே வீட்டின் சமையலறை சிங்க்கில் சாப்பிட்டத் தட்டுகளும், தேநீர் கோப்பைகளும், சமைத்த பாத்திரங்களும் அளவில்லாமல் நிறைந்துகொண்டேதானிருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை சமையலும் இரண்டு முறை தேநீர் போடுவதையும் தவிர்க்க முடியாது.
இதனால், ஐந்து முறை பாத்திரங்களைத் தேய்க்கும் அவசியம், வேலைக்குச் செல்பவராக இருந்தால் காலை - மாலை - இரவு என மூன்று முறை தேய்க்கும் வேலையும் கண்டிப்பாக இருக்கும்.
இந்த நிலையில்தான், இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் சமையலறைப் பொருள்களில் டிஷ்வாஷர்கள் அதிகரித்து வருகின்றன.
அவ்வாறு பல விளம்பரங்களுடன் விற்பனைக்கு வரும் டிஷ்வாஷர்களில், சுத்தமான பாத்திரங்கள், குறைவான தண்ணீர் பயன்பாடு, மிகக் குறைந்த நேரத்தில் ஏராளமான பாத்திரங்கள் தேய்க்கலாம் என்பதே பிரதானமாக உள்ளன.
ஆனாலும் பலருக்கும் சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன.
எப்படி டிஷ்வாஷரில் தண்ணீர் மிச்சமாகும் என்பதும் அதில் ஒன்று.
இந்திய சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரங்களை இவை சுத்தப்படுத்துமா? என்பதும் அடங்கும்.
சரி ஒரு டிஷ்வாஷரில் எவ்வளவு பாத்திரங்களைத் தேய்க்க முடியும் என்பது முதல் தண்ணீர் எப்படி செலவாகும்? அதிக பாத்திரங்கள் தேய்க்குமா? நேரமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு பயனுள்ளதா? போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்தால்தான் டிஷ்வாஷர் தேவையா என்பத முடிவு செய்ய முடியும்.
அதற்கு முதலில், இந்த கேள்விகளுக்கு பதில் தேடலாம்.
நாள்தோறும் வீட்டில்தான் சமைத்து சாப்பிடுபவராக இருந்தால்
ஒவ்வொரு நாளும் பாத்திரங்கள் தேய்க்க பல மணி நேரம் செலவிட்டால்.
அலுவலகம், வீட்டு வேலை என நேரமின்மையால் அவதிப்படுபவராக இருந்தால்
நாள்தோறும் வீட்டில் செய்யும் வேலைகளைக் குறைக்க விரும்பினால்
வீட்டில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால்.
பணியாள்கள் வைக்க முடியாத நிலை, ஆனால் டிஷ்வாஷர் வாங்கும் அளவுக்கு வசதி இருந்தால்
நிச்சயம் டிஷ்வாஷர் வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம். எது சிறந்தது, விலை, தரம் என அனைத்தையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்.
ஒருவர் அல்லது இரண்டு பேர் மட்டும் இருந்து பெரும்பாலும் வெளியில் சாப்பிட்டால்
சில பாத்திரங்கள் மட்டும்தான் வீட்டில் இருக்கிறது
சமையலறையில் இடமில்லை
பெரிய அளவில் பொருள் செலவிட முடியாத நிலை இருந்தால் கைகளால் பாத்திரங்களைத் தேய்ப்பதுதான் சிறந்த தெரிவாக இருக்கும்.
Summary
Do dishwashers save water?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முல்லைப் பெரியாறு அணை மிகை நீரை தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டும்! கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா

கடனாநதி அணையிலிருந்து ஆற்றில் தண்ணீா் திறக்க கோரிக்கை

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!

பிறரை உயர்த்தும் மனம் கொண்டவர்கள் மகர ராசியினர்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



